ஹச்.ராஜா நீதிமன்றத்தில் ஆஜர் – ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிஜேபி தேசிய செயலாளர் ஹச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை அவதூறாக பேசினார் என கூறி உதவி ஆணையாளர் ஹரிஹரன் விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹச்.ராஜா ஆஜராகாததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது.  இதனால் இன்று ஹச்.ராஜா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

Translate »
error: Content is protected !!