தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும் என்றும், இதன்காரணமாக நாளை மறுதினம் வரை கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.