டெல்லி,
டெல்லியில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. மேலும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் டெல்லியில் முக்கிய சாலைகளில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐடிஓ உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் பல மீட்டர் தொலைவில் அணிவகுத்து நின்றன.