ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. வெப்பநிலையும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுள்ளது.
இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், கனரக இலகுரக வாகனங்கள் பல இடங்களில் சிக்கிக் தவிக்கின்றன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.