நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாலம், பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தரபிரதேசத்தின் லக்னோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் மற்றும் அசாமின் துப்ரி ஆகிய பகுதிகளில், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவியதால், முகப்பு விளக்கு எரியவிட்டு வாகன ஓட்டிகள் பயணம் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பனிமூட்டம் காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. பனிமூட்டம் காரணமாக இன்று 13 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.