புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சாரதாம்பாள் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநிலத்தில் 15-18 வயதுடைய 83 ஆயிரம் சிறார்களில் , 31 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள சிறார்களுக்கு 3 நாட்களில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் உணர்வுகளை மதித்து, விழாக்கள் கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளதால் பொதுமக்கள் கட்டுப்பாட்டோடு பொங்கலை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.