விர்ஜின் ஹைப்பர்லூப் புல்லட் ரயில்களைப் போன்ற அதிவேக தரை போக்குவரத்து அமைப்பு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அது முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலையம், “இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டுக்கு வரும்” என கூறினார்.
மேலும் அவர் கூறியது, இந்த ஹைப்பர்லூப் புல்லட் ரயில் முதலில் இந்தியாவில் அல்லது சவுதி அரேபியாவில் பயன்பாட்டிற்கு வரும். பிரபலமாக இருக்கும் தூரமான இடங்களுக்கு விமானம் வேகத்தில் பயணம் செய்ய லாரிக்கு செலுத்தும் விலையை செலுத்தினாலே போதும்” என்றார்.