ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே கோனா என்கிற எலெக்ட்ரிக் காரை தயாரித்து வரும் நிலையில் 2028ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மேலும் 6 வகையான மின்சார கார்களை தயாரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
ஹூண்டாய் இந்தியா தலைவர் கிம் கூறுகையில், முதல் மின்சார கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என்றும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.4,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகள் முதலில் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டு அடுத்த சில ஆண்டுகளில் சென்னையில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்றார்.