5ஜி சேவையால் விமான சேவை பாதிப்பு

அமெரிக்காவின் 5ஜி சேவை பயன்பாடு காரணமாக, கடந்த மாதத்தில் இரு நாட்கள் இந்தியா- அமெரிக்கா இடையே 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதென மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5ஜி சேவை அலைவரிசை பயன்பாட்டால் விமான சேவை பாதிக்கப்பட்டதா என்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், 5ஜி அலைவரிசையால் அமெரிக்காவில் விமான சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடைந்து வரும் பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் 5ஜி சேவையால், விமானத்தின் அலை வரிசையில் பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு கடந்த மாதம் இந்தியா- அமெரிக்கா இடையே 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான சேவைக்கான மாற்று முறையை நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்க விமான நிறுவனங்களிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!