கூடுதலாக பேருந்துகளை இயக்க கோரிக்கை

 

அரசுப் பேருந்துகளில் ஒரே நேரத்தில் 130க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதால் படியில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளதால் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த அளவே அரசு பேருந்துகளை இயக்குவதால் பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அலுவலக வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் சிரமப்பட்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக சித்தேரி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, கடத்தூர், பெரியபட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் அரசு நகர்புற பேருந்துகளில் சுமார் 130க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்வதால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகின்றன.

கடந்த வாரத்தில் தமிழக அரசு அறிவிப்பின்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் நின்று பயணம் செய்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறைந்த அளவிலான பேருந்துகளை இயக்கப்படும் பொழுது பள்ளி, கல்லூரிக்கும் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்வோர் ஒரே நேரத்தில் பயணம் செய்து சரியான நேரத்திற்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.. இதுபோன்று சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டு செல்வதால் சரியான நேரத்தில் செல்லமுடியாமல் தாமதமாக செல்லும் சூழ்நிலை ஏற்படுகின்றன. எனவே இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் மாணவர்கள் படியில் தொங்கி பயணம் செய்யும் நிலையை மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கூடுதலான பேருந்துகளை இயக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!