சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் குறைந்து 36,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 4,519 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 64,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.