10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஊக்கத்தொகை வழங்கினார்.
டான்சி ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஊக்கத்தொகையை தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வழங்கினார்.
அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12 வகுப்பு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பெற்ற டான்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிகழ்வில் ஊரக தொழில்துறை முதன்மை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.