இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 33,750 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில், மராட்டியத்தில் 510,

டெல்லி – 351,

கேரளாவில் 156,

குஜராத்தில் 136,

தமிழ்நாட்டில் 121,

ராஜஸ்தானில் 120,

தெலுங்கானாவில் 67,

கர்நாடகாவில் 64,

ஹரியானாவில் 63,

ஒடிசாவில் 37,

மேற்கு வங்கத்தில் 20,

ஆந்திராவில் 17,

மத்தியப் பிரதேசத்தில் 9, 

உத்தரகாண்டில் 8,

உத்தரப் பிரதேசத்தில் 8,

சண்டிகரில் 3,

ஜம்மு காஷ்மீரில் 3,

அந்தமான் நிக்கோபாரில் 2,

புஞ்சாபில் 1,

கோவாவில் ஒருவர்,

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவர்,

லடாக்கில் ஒருவர் மற்றும் மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 639பேர் குணமடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!