டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு போலீசார் செல்ல வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை விசாரணை அதிகாரி உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தும்போது சந்தேக நபர்கள் உடன் இருக்கக்கூடாது எனவும், குழந்தைகள் தேர்வு செய்யும் இடத்தில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணை அதிகாரி பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பெற வீட்டிற்கு செல்லும் போது வாகனத்தில் சைரனை பயன்படுத்த கூடாது எனவும், சாதாரண உடை அணிந்து வாக்குமூலம் பெற வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

Translate »
error: Content is protected !!