நாளை முதல் கட்ட அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாளை முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்கின்றனர். வடகிழக்கு பருவமழை பாதிப்பின் காரணமாக, சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகள் முழுவதுமான சேதமடைந்தது..சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், வெள்ளநீர் வடிகால்களை வடிவமைக்கவும் சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுநர்களை உள்ளடக்கிய சென்னை பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன கூடுதல் செயலாளருமான திருப்புகழ் தலைமையில் சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான 14 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.சென்னையில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், வெள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல், நகர்ப்புற திட்டமிடல், போன்றவைகள் குறித்து பல்வேறு கட்ட ஆய்வு நடத்திய குழுவினர் நாளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.குறிப்பாக, மழை வெள்ளத்தால் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள், அடுத்த முறை நடக்காமல் இருப்பதற்கான திட்டங்கள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..இந்த குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!