ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக், குல்காம், ஸ்ரீநகர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரத்தில் நடந்த என்கவுன்டரில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியது,
“ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு மொத்தம் 171 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 19 பயங்கரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், 152 பயங்கரவாதிகள் உள்ளூர்வாசிகள். கடந்த ஆண்டு 37 பொதுமக்களும், இந்த ஆண்டு 34 பொதுமக்களும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்” என்றார்.