ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே 244 மற்றும் 255 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் ஆகஸ்ட் 2019 முதல் பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும், எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.