சென்னை வில்லிவாக்கத்தில் அபயம் என்ற காப்பகத்தை நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் திறந்து வைத்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
சென்னை பெயின் & பாலியேட்டிவ் கெயர் தொண்டு நிறுவனம் சார்பில் 2014 ஆண்டு முதல் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் சிகிச்சை அளித்தும் பலனின்றி தீராத நோயினால் அவதிப்படுபவர்களுக்கு இலவசமாக வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னை பெயின் & பாலியேட்டிவ் கெயர் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மருத்துவ உதவி வழங்கும் அபயம் என்ற காப்பகத்தை வில்லிவாக்கத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் திறந்து வைத்துள்ளார்.