கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம்

செங்கோட்டையில் காவிக்கொடியை ஏற்றுவோம் என்ற பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு கர்நாடகா எதிர்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரான  கே.எஸ் ஈஸ்வரப்பா அண்மையில் செய்தியாளர்  சந்திப்பின் போது,  பாஜக கூறியது போல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதேபோல் இன்னும் 300 அல்லது 500 ஆண்டுகளில், செங்கோட்டையில் காவிக்கொடி பறக்கும் என தான் நம்புவதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில் அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சித்தராமையா, அவர் அமைச்சராக நீடிக்க எந்த தகுதியும் இல்லை எனவும், முதல்வர் பசவராஜ் பொம்மை அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!