கோடநாடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு


கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில், கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த அக்டோபர் 25ம் தேதி ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது சாட்சிகளை கலைத்தல், சாட்சிகளை அழித்தல், தடயங்களை அளித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 2வது முறையாக கோவையில் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

Translate »
error: Content is protected !!