சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு தொடக்கம்

கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் செராவீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாடு, கடந்த ஆண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதல் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் செராவீக் மாநாடு கூடியுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எரிசக்தித்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Translate »
error: Content is protected !!