பாறை உடைப்பில் ஈடுபட்ட விவசாயி மீது வழக்கு

உதகையில் அரசு அனுமதியின்றி பாறை உடைப்பில் ஈடுபட்ட விவசாயி மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பாறைகள் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டுமான பணியின் போது பாறைகளை உடைக்க வருவாய் துறையிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் உதகை தாலுகாவுக்கு உட்பட்ட கோழிப்பண்ணை பகுதியில் பட்டா மற்றும் அரசு நிலத்தில் தடையை மீறி பாறைகள் உடைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் அனுமதியின்றி பாறைகளை உடைத்து அரசு சொத்துக்களை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!