இந்தியாவில், டெல்டாவை போல் ஒமிக்ரானும் ஜனவரி மாத இறுதியில் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக நிபுணர் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஒமிக்ரான் பரவலுக்கு பின் பன்மடங்காக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஆனால் பிற நாடுகளை விட தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு கூறியிருந்தது. இந்தநிலையில் ஒமிக்ரான் பரவல் குறித்து பேசிய ஹெல்த் மெட்ரிக்ஸ் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் முர்ரே, இன்னும் இரு மாதங்களில் தொற்றுக்கு 300 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என கூறியுள்ளார். இந்தியாவில் ஜனவரி மாத இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் தொற்று எண்ணிக்கை உச்ச நிலையை அடையும் எனவும் எச்சரித்துள்ளார்.