சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி, பெட்ரோலுக்கு இணையாக நூறு ரூபாயை தாண்டி விற்பனையானதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்தநிலையில் தற்போது மழை வெகுவாக குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை குறைந்துள்ளன.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி, 50 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.