மகாராஷ்டிராவில் அகமதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் ஐசியூ வார்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 11 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். வார்டில் இருந்த 25க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.