மெகா தடுப்பூசி முகாம்: 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று 6ஆம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 50,000 இடங்களில் நடக்கும் தடுப்பூசி முகாமில், 2வது தவணையாக தடுப்பூசி போடப்படும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிப்பட்டிருந்தது.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: –

தமிழகத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வருகிறது என்ற எண்ணத்தில் மக்கள் அலட்சியமாக இருக்காமல் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர் எடுத்த முடிவுகள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார்.

Translate »
error: Content is protected !!