புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றித் துணை சபாநாயகராக தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரியில் 15 வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துணை சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு பதவியேற்றார். முதல் அமைச்சர் ரங்கசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் ராஜவேலுவை சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். இன்று மாலை புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.