தமிழகம் எங்கும் வரும் ஒருவாரத்திற்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் காலைப்பொழுதில் இருந்து மேகக்கூட்டங்கள் ஒன்று கூடி இருந்தது. தற்போது பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், தெற்குவாசல், காளவாசல், எஸ் எஸ் காலனி, கோச்சடை மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான சாரல் மழை பொழிய தொடங்கியுள்ளது.