16வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். பிராந்திய மற்றும் சர்வதேச நலன்கள் குறித்து விவாதிக்கப்படும் எனவும் கடல்சார் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா குடியரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.