குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனிமொழி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழகத்தின் அலங்கார ஊர்தியை நிராகரித்த ஒன்றிய அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., பாரதியார் போன்றோரின் தியாகங்கள் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இவர்களை பற்றிய ஒன்றிய அரசின் அறியாமை ஒட்டுமொத்த தமிழகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக வேதனை தெரிவித்தார். இந்தியா வடமாநிலங்களால் ஆனது அல்ல, அனைவருக்குமானது என குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அரசு ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என கூறியுள்ளார்.