மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் கொண்டவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போடும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தகுதியான பலரும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா-வை எதிர்த்து போராட பயத்தை காட்டிலும் தன்னம்பிக்கையே அதிகம் தேவை எனவும் தகுதியானவர்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறித்தியுள்ளார்.