உக்ரைனுக்கு 70 போர் விமானங்கள் வழங்கும் நேட்டோ

நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மேலும் 70 போர் விமானங்கள் வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பல்கேரியாவில் இருந்து 16 மிக் ரக போர் விமானங்களும் 14 வேறு ரக விமானங்களும், போலந்து 28, ஸ்லோவேகியா 12 என்ற கணக்கில் மிக் ரக போர் விமானங்களையும் அனுப்ப உள்ளதாக கூறியுள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளில் இருந்தும் ராணுவ உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நேட்டோவின் ராணுவ உதவியால் ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.

Translate »
error: Content is protected !!