நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை – உச்ச நீதிமன்றம்

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, தேசிய தேர்வு முகமைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீட் தேர்வில் தவறான சீரியல் எண் கொண்ட வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்பட்டதாக இரண்டு மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இரண்டு மாணவர்களையும் மறுதேர்வு செய்ய உத்தரவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தொடர்ந்து, இரு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கமுடியாது நீதிபதிகள் தெரிவித்தனர். 

Translate »
error: Content is protected !!