ஒமைக்ரான் பரவல் அச்சம்.. 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை

கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போத்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், லெசோதோ, எஸ்வாடினி மற்றும் மலாவி ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நேபாளத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக உயர் அதிகாரிகள் மட்டுமே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் நேபாள அரசு கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!