நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் – உச்ச நீதிமன்றம் அனுமதி

நீலகிரியில் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மதன் பி லோகூர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, யானைகள் வழித்தடத்திலுள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக நீக்கக்கோரவும், மேலும் விதிமுறைகளை மீறி புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும், இதனை துரிதமாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றிவந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியதால், அவரை பணியி டமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால் நிர்வாகரீதியாக மாற்றங்களை செய்ய அனுமதிவேண்டும் என தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய அனுமதி பிறப்பித்துள்ளது.

Translate »
error: Content is protected !!