தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் நிர்பந்திக்க முடியாது

தனிநபரின் ஒப்புதலின்றி, தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியும், வீடு வீடாக சென்று தடுப்பூசிசெலுத்தியதை உறுதி செய்ய கோரியும் இவாரா அறக்கட்டளை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தடுப்பூசி தொடர்பான மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில், தனிநபரின் ஒப்புதலின்றி அவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வற்புறுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் எங்கு சென்றாலும், தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என அரசு எவ்வித கட்டாயம் உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும், மக்களின் நலனை கருத்தில் கொண்டே தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது

 

Translate »
error: Content is protected !!