தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக 20கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை தடை செய்யவில்லை. மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்கள் குறித்து வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப்படையில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளது. முக்கிய வழக்குகளின் இறுதி விசாரணை செப்டம்பர் 14 க்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.