மழை நீரில் மூழ்கிய நாற்றங்கால் பண்ணை, ஒரு லட்சம் செடிகள் அழுகல்

பரமக்குடியில் தொடர் மழையால் நாற்றங்கால் பண்ணையில் மழைநீர் சூழ்ந்து ஒரு லட்சம் செடிகள் அழுகியது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தில் தமிழக அரசின் நாற்றங்கால் பண்ணை அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டுவரும் பண்ணையில் வேம்பு, புங்கை, புளி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. தினந்தோறும் ஐயாயிரத்திற்கும் அதிகமான கன்றுகள் மாவட்டம் முழுவதும் அனுப்பப்படுகிறது இந்நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தண்ணீர் பண்ணையில் தண்ணீர் சூழ்ந்து செடிகள் அழுகத் தொடங்கியது. இதனால் சுமார் ஒரு லட்சம் பாக்கெட்டுகளில் செடிகள் அழுகியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு வேந்தோணி ஊராட்சி சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீரை வெளியேற்ற பின்பு நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் கூறினர்.

 

Translate »
error: Content is protected !!