ஓலா நிறுவனம் ‘ஓலா எஸ்1 ஏர்’ என்ற புதிய மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவில் இன்று (22ம் தேதி) அறிமுகம் செய்ய உள்ளது. இதன் விலை மிகவும் மலிவாக ரூ.80,000க்குள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஒரு முறை சார்ஜ் போட்டால் 80-100 கிமீ இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். அலுமினியம் அலாய் வீல்கள், சிங்கிள் பீஸ் சீட், பில்லியன் க்ராப் ஆகிய அம்சங்களும் இடம்பெற போகின்றன.