உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 143 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 5 பேரும் தர்வாத், பத்ரவதி, உடுப்பி மற்றும் மங்களூரை சேர்ந்தவர்கள் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.