ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது, மேலும் பல உருமாற்றங்களுடன் கொரோனா மீண்டும் தாக்கும் என்றுபாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது குறித்து நடைபெற்ற ஆய்வில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அதன் வடிவம் மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்த சில மாதங்களில் கொரோனா, உலகம் மீண்டும் புதிய உருமாற்றத்துடன் ஆட்டிப்படைக்கக் கூடும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உருமாற்றம் அடையும் போது அது படிப்படியாக அதன் வீரியத்தை இழக்கும் என்றும் கூறப்படுகிறது.