ஒமிக்ரான் பீதி – உலக சுகாதார அமைப்பு முக்கிய ஆலோசனை

 

ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழுவினர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய கொரோனா திரிபான ஒமிக்ரான் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் உள்ளன. இதற்கிடையே ஒமிக்ரானை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் தேவையா, தடுப்பூசியின் செயல் திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் போன்ற பல்வேறு சந்தேகங்கள் உலக நாடுகளிடையே நிலவு வருகிறது. இந்த நிலையில் நோயெதிர்ப்புத் திறன், செயல்திறன், பாதுகாப்பு, மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான தேவை குறித்து பரிசீலிப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.

 

Translate »
error: Content is protected !!