டெல்லி கலவர வழக்கில் முதன்முதலாக ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக டெல்லியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் இரு பிரிவினரிடையே கடந்த ஆண்டு கலவரம் ஏற்பட்டது. அதில் மனோரி என்ற மூதாட்டியின் வீடு சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதுதொடர்பாக தினேஷ் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தண்டனை விவரங்கள் வரும் 22 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.