ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம்

ராணுவ வீரர்களின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் தற்போதுள்ள நடைமுறையை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைமுறைப்படுத்தியது.

ஆனால் பகத் சிங் கோஷ்யாரி கமிட்டியின் பரிந்துரையின்படி, தற்போதைய கொள்கைக்குப் பதிலாக வருடாந்திர திருத்தத்துடன் கூடிய ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில்  ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!