2.31 லட்சம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பாடு – மத்திய அரசு

 

இந்தியா முழுவதும் 2.31 லட்சம் ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 31 ஆயிரம் வரையிலான ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், இவற்றில் 47 சதவீதத்திற்கும் அதிகமானவை கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!