டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி குறித்தும் பார்லிமென்டில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கிய நிலையில், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.