சத்தீஸ்கரில் விவசாயத்திற்கு பசுவின் சிறுநீரை பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை ஆலோசனை நடத்தி 2 வாரங்களுக்குள் செயல்திட்டம் உருவாக்குமாறு தலைமை செயலாளருக்கு முதல்வர் பூபேஷ் பாகில் உத்தரவிட்டுள்ளார். விவசாயத்திற்கு தொடர்ந்து ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்வளம் குறைந்து வருவதுடன் மக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே விவசாயத்தில் நச்சு ரசாயனங்களின் பயன்பாட்டிற்கு பதிலாக பசுவின் சிறுநீரை பயன்படுத்துவதற்கான அபரிவிதமான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் சில இடங்களில் இது வெற்றிகரமாக பயன்படுத்தியதற்கான உதாரணங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.