உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஷபீக் என்ற பெண்ணும் கீவ் நகரில் இருந்து மீட்கப்பட்டு உள்ளார். இதற்காக இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மிகவும் கடினமான சூழ்நிலையில் சிக்கித் தவித்த போது, எல்லா வழிகளிலும் ஆதரவளித்த உக்ரைன் நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும் இந்தியப் பிரதமருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.