கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்றம் முற்றுகை

கனடாவைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டிலும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி வெலிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறை தடுத்தபோது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, கொரோனா விதிமுறைகளை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிப்பதாகவும், சிலர் மட்டுமே எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!