நீலகிரியில் கடும் பனிப்பொழிவு மற்றும் மிதமான மழை பெய்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ் கோர்ஸ், காந்தள் மைதானம், தலைகுந்தா, அவலாஞ்சி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறைப்பனியின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடும் பனிப்பொழிவு மற்றும் மிதமான மழை பெய்தது. கடும் மேக மூட்டத்தால் சாலைகளில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் சென்றனர். மேலும் மேகமூட்டம் தொடர்ந்தால் தேயிலை செடிகளை நோய் தாக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.